துதிப் பாடல்கள்

நாதா இயேசு நாதா

Naadhaa Yesu Naadhaa

நாதா இயேசு நாதா - 4

நீர் மட்டும் வேண்டும் நாதா

நீர் வந்தால் போதும் நாதா - 2

என் வாழ்விலே துணை

ஒன்றும் இல்லை நாதா

துணையாளரே துணையாகவே

நீர் வந்தால் போதும் நாதா - 2

கர்த்தாவே உம்மை எக்காலத்திலும்

நான் ஸ்தோத்தரிப்பேன் - 2

என்னிடத்தில் பரிசுத்தம் இல்லை நாதா

பரிசுத்தரே பரிசுத்தப்படுத்திட

நீர்வந்தால் போதும் நாதா - 2

என்னை தேற்றிட ஒருவரும் இல்லை நாதா

தேற்றரவாளனே எனைத்தேற்றவே

நீர்வந்தால் போதும் நாதா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு