துதிப் பாடல்கள்

நான் ஆராதிக்கும் தேவன்

Naan Aaraadhikkum Devan

நான் ஆராதிக்கும் தேவன்

என்னை என்றென்றும் நடத்திடுவார்

நான் நேசிக்கும் நேசம் உள்ள தேவன்

என்னை தினம் தினம் காத்திடுவார்

1. இருளின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்

எனக்கொன்றும் பயமில்லையே

அக்கினி நடுவில் நான் கிடந்தாலும்

எனக்கொன்றும் அச்சம் இல்லையே

அவர் ஜீவனுள்ளவர் என்கூட இருக்கிறார்

அவர் அற்புத தேவன் என்னை நடத்திச் செல்வார்

2. மரண பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்

எனக்கொன்றும் தீங்கு இல்லையே

சிங்ககெபி நடுவே நான் கிடந்தாலும்

எனக்கொன்றும் தீங்கில்லையே

3. கண்ணீர் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும்

எனக்கொன்றும் கலக்கம் இல்லையே

வனாந்திர வழியே நான் நடந்தாலும்

எனக்கொன்றும் சோர்வு இல்லையே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு