நான் நம்புகின்ற தேவன் நல்லவர்
நான் நம்புவது அவரால் வரும்
நம்பிக்கைக்கு உரியவரே - என்
நாள் தோறும் காப்பவரே - என்னை
ஆபத்திலே கூப்பிட்டேன்
அருகில் வந்து உதவி செய்தார்
துன்ப நேரம் துவண்டு போனேன்
தோளின் மீதே சுமந்திட்டார் - நம்பிக்கை
கர்த்தரில் நான் மகிழ்ந்திருப்பேன்
அவரின் நாமம் உயர்த்திடுவேன்
செய்த நன்மைகள் யாவும் நினைப்பேன்
நன்றி சொல்லி துதித்திடுவேன் - நம்பிக்கை
காத்திருந்து பெலனடைந்து
கழுகைப் போல பறந்திடுவேன்
கர்த்தரின் சமூகம் தரிசித்திடுவேன்
அவரின் பாதம் சரணடைவேன் - நம்பிக்கை