நான் ஓடறதும் தேடறதும் எல்லாமே
எங்க இயேசப்பாவுக்காகத்தான் இருக்கனும்
நான் பாடறதும் பேசறதும் எல்லாமே
எங்க இயேசப்பாவ பத்தி இருக்கனும்
நான் இன்னும் ஜீவனோட
நன்மை செய்யும் தேவனோட
நம்பிக்கையா இருக்கிறது யாரால
எங்க இயேசுவால
குறுகுறுன்னு சிரிச்சிகிட்டு
குத்தம்குறைய தொலைச்சுபுட்டு
குதூகலமா வாழுறது யாரால
எங்க இயேசுவால
கடனும் உடனும் இல்லாம
கைகட்டி நில்லாம
கச்சிதமா வாழுறது யாரால
எங்க இயேசுவால
அரண்மனையா தேடாம
அங்கும் இங்கும் ஓடாம
அலைச்சலெல்லாம் அடங்கினது யாரால
எங்க இயேசுவால
வருத்தம் வேதனை துக்கம்
ஓடிப்போச்சி ஒரு பக்கம்
வாழ்க்கையிலே மறு பக்கம் யாரால
எங்க இயேசுவால
எதை நினைச்சும் கலங்காம
இதயத்தில குலுங்காம
நிம்மதியா சிரிக்கிறது யாரால
எங்க இயேசுவால
மரணத்துக்கு அஞ்சிடாம
மறுதலிப்பு செஞ்சிடாம
மரித்தாலும் பிழைத்திருப்பது யாரால
எங்க இயேசுவால
பரலோகம் திறந்திருக்கு
பாதையொன்னு கிடைச்சிருக்கு
பக்குவமா போய்ச்சேருவேன் யாரால
எங்க இயேசுவால