துதிப் பாடல்கள்

நான் பாவி இயேசுவே

Naan Paavi Yesuvae

நான் பாவி இயேசுவே - என்

வாழ்வை மாற்றமே

விழுந்துவிட்டேன் மீண்டும்

தவறிவிட்டேன் என்னை

தூக்கும் இயேசுவே - 2

சோர்ந்து விட்டேன் மனம்

உடைந்துவிட்டேன் என்னைத்

தேற்றும் இயேசுவே - 2

கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்

மன அமைதி தாருமே - 2

புரியவில்லை பாதை தெரியவில்லை

பாதை காட்டும் இயேசுவே - 2

நாடுகிறேன் உம்மை தேடுகிறேன்

எந்த்ன தாகம் தீருமே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு