நான் பெற்ற நற்செய்தி புதுவாழ்வை
நான் நாடெங்கும் போதிக்க
வில்லையென்றால்
ஐயோகேடு எனக்கு ஐயோகேடு - 2
இயேசு கொடுத்த கட்டளைகள் தெளிவாயிருக்க
ஏனோ எந்தன் உதடுகள் மௌனம் காக்குது - 2
திருமுழுக்குத் திருநாளில் எனக்களித்த போதனையை - 2
திரும்பி எந்தன் வாழ்விலே எண்ணவில்லையே
இயேசறியா மக்கள் தொகை கோடான கோடி
அவரை நான் அறிவிப்பேன் நாளும் தேடி
சிலுவையிலே தொங்குமேசு எங்கு செல்லுவார் - 2
எங்கும் நடந்து செல்லும் நான் அவரை சொல்லுவேன்
எனக்களித்த தாலந்து என்னவாயிற்று
மண்ணில் மறைத்து மூடிவிட்டு சும்மா இருக்கின்றேன் - 2
அணைந்து ஒளிவீசாத விளக்காகினேன் - 2
என்ன கணக்கு நான் சொல்லுவேன் தீர்வை நாளிலே