நான் புகழ்வேன் கர்த்தரைப் புகழ்வேன் - என்
ஜீவிய கால மெல்லாம்
நான் புகழ்வேன் இயேசுவைப் புகழ்வேன் - என்
ஜீவிய கால மெல்லாம்
என் வேண்டுதலை அவர் கேட்டார்
என் துன்பத்தினின்று மீட்டார்
தூய வாழ்வே புகழ்ச்சி கீதம்
தூய்மையாகவே நானும் வாழ்வேன் - 2
அன்று கல்வாரியில் நம் சுமைகளை தாங்கியவர்
இன்று என் வாழ்விலே சுமைகளை தாங்கினார்
மகிழ்ந்து பாடி மகிமை தேவனை
நாளும் நானும் போற்றுவேன்
அன்று அன்புடனே என்னை அழைத்த என் அன்பின்நேசர்
இன்று அகில மெங்கும் வழி நடத்தி செல்கின்றார்