நான் வணங்கும் தெய்வம்
அவர் இயேசு என்னும் நாமமுள்ள ஒருவரே
அவர் என்னை நினைத்த தெய்வம்
என்னை கண்ணுக்கு கண்ணாய் காத்திடும் என் நேசரே
வானத்தையும் பூமியையும் உண்டாக்கி வைத்தவராம்
இருளையும் வெளிச்சத்தையும் இரண்டாகப் பிரித்தவராம்-2
எந்த துதிகளுக்கும் ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரர்..
ஆதாமின் மீறுதலால் நானும் காயம் பட்டேன்
என்னுடைய மீறுதலால் எந்தன் இயேசு காயம் பட்டார்;-2
(என்ன சொல்லிப்பாடுவேன்-நான் என்ன சொல்லிப்பாடுவேன்)
எந்தனுக்கு சமாதானம் உண்டு பண்ணவே
எந்தனது ஆக்கினை அவர்மேலே வந்ததே-2
என் இயேசு ராஜாவின் தழும்புகளால் மட்டுமே
என் நோயும் குணமாகி தேவ சுகம் கிட்டுமே-2
என்னுடைய பாடுகளை ஏற்றுக்கொண்டவராய்
என்னுடைய துக்கங்களைச் சுமந்து கொண்ட தேவனவர்-2
(என்ன சொல்லிப்பாடுவேன்-நான் என்ன சொல்லிப்பாடுவேன்)
நிந்தைகளும் அவமானமும் அவரைச் சூழ்ந்ததே
எந்தனுக்காய் அத்தனையும் தாங்க நேர்ந்ததே-2
துளிர்க்கிற வேரைப்போல எழும்பின என் இயேசுவின்
விரும்பின ரூபம் மாறி அழகு முகம் சிதைந்ததே-2
சர்வத்திற்கும் மேலான சர்வவல்ல தேவனவர்
சர்வ லோக பாவத்தையும் சுமந்து தீர்த்த இயேசு அவர்-2
(என்ன சொல்லிப்பாடுவேன்-நான் என்ன சொல்லிப்பாடுவேன்)
எண்ணாமற்போன என்னை எண்ணிப்பார்த்தவர்
காணாமற்போன என்னை கண்டு பிடித்தவர்-2
காணக்கூடாதவரை கண்கள் இன்று கண்டதே
சேரக்கூடாதவரை சேர மனம் துடிக்குதே-2