துதிப் பாடல்கள்

நான்காணாம போன வெள்ளி காசு

Naangaanaama Pona Velli Kaasu

நான்காணாம போன வெள்ளி காசு

என்ன கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சார் இயேசு

நான் தூசியத்தான் உதறிவிட்டு எழுந்தேவேன்

என் இயேசப்பா கரத்தில் இனி பயன்படுவேன்

நான் இயேசப்பா பிள்ளையாயிட்டேன்

பழச மறந்து இப்போ மனுஷனாயிட்டேன

ஓடி ஓடி மூலையிலே ஒளிஞ்சேன்

பாவ இருட்டுக்குள்ளே பவ்வியமா மறைஞ்சேன்

வேத வெளிச்சங்கொண்டு என்னைத் தேடினாரு

ரத்த வேர்வை சிந்தி கண்டு பிடிச்சாரு - என்ன

நான் இயேசப்பா . .

யூதாஸ் கரத்தில் வெள்ளிக்காசா இருந்தேன்

இயேசுவக் காட்டி கொடுக்க நானுங்கூட துணிஞ்சேன்

தூக்கி எறிந்த போது ஆலயத்தில் விழுந்தேன்

அப்பா பாதங்களில் கண்ணீர் விட்டு அழுதேன் - இயேசு

என் பாவங்கள் மன்னிச்சிட்டாரு

மன்னிச்சி மகனாக ஏத்துக்கிட்டாரு

நான் ஆடுவேன் பாடுவேன் கொண்டாடுவேன் - 2

என் ஆண்டவரின் நாமத்தையே ஆராதிப்பேன் - 2

ஓஹோ ஓஹோ ஓஹோ ஹோ ஹோ . . .

லலலா லாலாலா லாலாலாலா . .

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு