நாங்கள் ஆராதிப்போம்
எங்கள் இயேசுவை
நாங்கள் ஆராதிப்போம்
எங்கள் தேவனை..ஓ - 2
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
நடனமாடி துதித்திடுவோம்
ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்
நன்றி சொல்லி துதித்திடுவோம்
1. ஆயிரம் துன்பம் வந்தாலும்
நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ
துன்பமே வாழ்க்கையானாலும்
நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2
இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள்
அவரை மறக்கப்போவதில்லை - 2
2. வெள்ளம் போல் சாத்தான் வந்தாலும்
நாங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்..ஓ.
வேதனை பெருகிவிட்டாலும்
நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2
இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள்
அவரை மறக்கப்போவதில்லை - 2
3. மலைகள் விலகினாலும் நீங்கள் ஆண்டவரை ஆராதிப்போம்...ஓ.
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் நாங்கள் இயேசுவையே துதிப்போம் - 2
இயேசு எங்களை மறப்பதில்லை நாங்கள்
அவரை மறக்க போவதில்லை - 2