நாங்கள் நம்பும் தெய்வம்
என்றும் இயேசு என்றும் - 2
குறைவானாலும்
நிறைவானாலும்
சுமையானாலும் - அது
பாரமானாலும்... ஒ.. - 2
1. வானத்தின் பலகணி திறப்பவர்
எங்களை ஆசீர்வதிப்பவர் - 2
ஒரு தந்தையைப் போல
எங்களை சுமக்கும் தகப்பனாம்
ஒரு தாயைப்போல எங்களை
நேசிக்கும் அன்னையாம் - 2
2. பாவத்தில் மரித்த எங்களை
நீதிக்கு பிழைக்கச்செய்தவர் - 2
ஒரு மனிதனைப்போல முகத்தை
பார்ப்பவர் இல்லை அவர்
எங்கள் இதயம் பார்த்து எதையும்
செய்யும் தேவனவர் - 2
3. உலகத்தில் இருக்கிற அவனிலும் (இந்த)
எங்களில் இருப்பவர் பெரியவர் - 2
இந்த உலகம் கூட எங்களை
மறந்து போகலாம் - என்றும்
எங்களை நினைத்து
ஆசீர்வதிப்பவர் கர்த்தரே - 2