நாவை அடக்கு பேச்சை குறைத்திடு
சுகமாய் வாழ்ந்திடு மகளே - 2
உன் வாழ்வின் அதிகாரமும்
உன் தாழ்வின் அதிகாரமும்
உன் நாவில் தானே உள்ளது
அதை காத்திடு மகனே நல்லது - 2
அனைவரிடமும் அன்பாய் பழகு
ஆத்திரம் வந்தால் அதையும் தாண்டிடு - 2
பட்டையக்குத்துப் போல் பேசிடவிரும்பாதே - 2
வார்த்தைகள் பிறந்து விட்டால் மீண்டும் திரும்பாதே - 2
சபையிலே மாத்ரம் பிறக்கும் ஸ்தோத்திரம்
வீட்டுக்கு வந்தால் எல்லாம் மாறிடுமே - 2
இரட்சிக்கப்பட்டது கெட்ட வார்த்தைகள் பேசவா - 2
இரட்சிப்பு என்பது வீணாய் போவதா - 2
பழையன ஒழிந்து புதிதாய் பிறந்தோம் (இயேசுவின்)
இரத்தத்தினாலே நீதிமானாய் மாறினோம் - 2
நீதிமான்களின் நாவு என்றுமே - 2
ஒளஷதமானது வேதம் சொல்லியது