நல்ல மேய்ப்பரே இயேசுநாதரே
ஜீவன் சத்தியம் வழி நீரே ஐயா
உந்தன் ஆட்டு மந்தையில் சின்ன ஆட்டுக்குட்டி
நான் மெதுவாக நடத்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - (2)
பெயர் சொல்லி என்னையும் அழைத்தீரே
என் முன்னே சென்று போவீரே - (2)
உமது அன்பின் குரலை நான்
அறிந்த படியால் பின்பற்றுவேன் - (2)
அமர்ந்து தண்ணீரின் அன்டையிலே
நிதம் என்னை நன்றாய் நடத்திடுவீர் - (2)
உள்ளும் புறமும் நான் சென்று
மேய்ச்சலை காண்பதால் தாழ்ச்சியடையேன் - (2)
மரணத்தின் பாதையில் நடந்தாலும்
சற்றும் சாவு கண்டு அஞ்சேனே - (2)
தேவனே நீர் என்னோடிருப்பீர்
சத்துருவை வென்று ஜெயம் தருவீர் - (2)
நீதியின் பாதையில் அனுதினமும்
என்னை அன்பாய் அழைத்துச் செல்வீர் - (2)
உமது கோலும் தடியும் என்னை
நிதமும் தேற்றும் துதித்திடுவேன்- (2)