நம்பியுள்ளேன் நான் நம்பியுள்ளேன்
ஜீவ நாளெல்லாம் உம்மை துதித்திடுவேன்
ஸ்தோத்தரிப்பேன் வாழ்க்கை முழுவதுமே - 2
கண்ணீரின் வேலையிலே கரம்பிடித்தவர் நீரே
தள்ளாடும் என்னை மீட்டு நீர் தோலில்சுமக்கின்றீர் - 2
தாயும் நீர்தானே அருமை தந்தையும் நீர்த்தானே
உயிருக்கு மேலாக உண்மை உறவும் நீர்தானே - 2
என் முன்னே செல்பவரே நீர் யெகோவா தேவன் - 2
துன்மார்க்கரின் சிந்தனைகள் வழிதப்ப செய்கின்றீர்
யோசிக்க தெரியாத எனக்கு என்றும் ஆலோசகர் நீரே - 2
யோசனை பெரிதைய்யா உமது அற்புதம் சிறந்ததைய்யா
உம் கிருபை கிருபையே ஒவ்வொரு நாளும் நடத்தினது - 2
என்னோடு இருக்கும் தேவன் எல்லாம் பார்த்துக் கொள்வீர் - 2
சாத்தானை காலின் கீழே நசுக்கிவிடுகிறீர்(என்னை)
இராஜாக்கள் பிரபுக்களோடு அமரசெய்கின்றீர் - 2
உன்னதமானவரே எல்லா மகிமைக்கு பாத்திரரே
ஞானம் நிறைந்தவரே என்றும் மாறாத வல்லவர் நீர் - 2
எப்போதும் வெற்றி தருபவர் யேகோவா நிசியே - 2
போராட்டம் நிந்தனையில் சிலுவை சுமக்கின்றேன்
ஏலோயீம் நாமத்தாலே வெற்றி நிச்சயமே (சத்தியமே) - 2
நிற்கிற இடமெல்லாம் அடிகள் உறுதி செய்கின்றீர்
கரங்களில் ஏந்தி கொண்டு என்னை பாதுகாக்கின்றீர் - 2
நீர் போதும் வாழ்வினிலே வேறொன்றும் வேண்டாம் - 2