நன்றி சொல்லிப் பாடிடுவேன்
சேனைகளின் கர்த்தரையே (2)
கண்மணியைப் போல என்னைக் காத்திடுவீரே
கண்ணை வைத்து ஆலோசனை தந்திடுவீரே
1. உம்முடைய அதிசயங்கள்
விவரிப்பதற்காக
எந்தன் நாவில் உந்தன் துதியை சொல்லிட வைத்தீர் (2)
பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி
2. குயவனாக மண்ணில்
என்னை உருவாக்கினீரே
குற்றமற்ற இருதயத்தை
தந்து மகிழ்ந்தீரே (2)
பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி
3. துதியின் மத்தியில் வாசம்
செய்யும் தூய அன்புதேவா
துதித்துப்பாட உயர்த்திப்பாட
கிருபை தாரும் நாதா
பரிசுத்தர் கர்த்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (2) நன்றி