நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற
நன்மைகள் எண்ணிப் பாடுவேன் - நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1. தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம் உமதல்லோ- (நான்)(2)
மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே…
தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே… - (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2. உம் அன்பை நினைக்கையில் நெஞ்சம் நெகிழுதய்யா
உம் தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா(2)
இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா… -
நட்பின் எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3. இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)
நன்மை யாவுமே தந்த நேசரே… -
உம்மைப் போலவே யாரும் இல்லையே….
நன்றி நன்றி இயேசு இராஜா – 6