துதிப் பாடல்கள்

நன்மை செய்யும் தேவனே

Nanmai Seyyum Devanae

நன்மை செய்யும் தேவனே

எனக்கு நன்மை செய்த ராஜனே - 2

நன்றியோடே துதிக்கிறேன்

உமக்கு நன்றி சொல்லி மகிழ்கிறேன் - 2

நன்றி உமக்கு நன்றி

நன்றி உமக்கு நன்றி 2

1. நீ பாவி என்று என்னை ஏசின

மனுஷர் மத்தியிலே

போ இனி பாவம் செய்யாதே

என்று சொன்ன தேவனே - 2

பாவம் பெருகின இந்த இடத்தில்

கிருபை பெருக செய்தீரே - 2

உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன்

துதித்து கொண்டே இருக்கிறேன்

உம்மை துதிக்கிறேன் துதிக்கிறேன்

துதிப்பதினால் தான் வாழ்கிறேன்

2. நீ பெலவீனன் என்று என்னை தள்ளிய

மனுஷர் மத்தியிலே

உனக்கு இருக்கும் இந்த பெலத்தோடே

போ என்று சொன்ன தேவனே - 2

என் பெலவினத்தில் உம் பெலன் தந்து

பூரணமாக செய்தீரே - 2

3. நீ வியாதியஸ்தன் என்று ஒதுக்கிய

மனுஷர் மத்தியிலே

எனக்கு சித்தம் உண்டு சுத்தமாகு

என்ற தேவனே - 2

உம் தழும்புகளாலே என்னை குணமாக்கி

மகிழச்செய்தவர் நீரே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு