நன்மையான எந்த ஈவும்
பூரணமான வரமும்
ஜோதிகளின் பிதாவினிடத்தில்
இருந்து இங்கு வருகிறதே
இருந்து இங்கு வருகிறதே
நன்மைகளின் உருவே
பாவம் போக்கும் மருந்தே
பரலோக மெய் வரவே
பாடி உம்மை துதிக்கின்றேன்
பாடி உம்மை துதிக்கின்றேன்
காலை நேர பனியும்
மாலை நேர இதமும்
ஜோதிகளின் பிதாவினிடத்தில்
இருந்து இங்கு வருகிறதே
இருந்து இங்கு வருகிறதே
சாந்தமுள்ள குணமும்
அன்புள்ள நம் மனமும்
ஜோதிகளின் பிதாவினிடத்தில்
இருந்து இங்கு வருகிறதே
இருந்து இங்கு வருகிறதே
நோய்கள் தீரக்கும் வரமும்
ஆசீர்வதிக்கும் கரமும்
ஜோதிகளின் பிதாவினிடத்தில்
இருந்து இங்கு வருகிறதே
இருந்து இங்கு வருகிறதே
தூய்மையான நினைவும்
மகிழ்ச்சியான வாழ்வும்
ஜோதிகளின் பிதாவினிடத்தில்
இருந்து இங்கு வருகிறதே
இருந்து இங்கு வருகிறதே
பரத்தை விட்டு இறங்கி
பரமேறி பின் சென்ற
மெய்தேவன் இயேசுவுக்கு
நிகரில்லை பூமியில்
நிகரில்லை பூமியில்