நீ முதல்வர் ஆனாலும் நீ பிரதமர் ஆனாலும்
ஐநாவுக்கே நீ தலைவர் ஆனாலும்
இந்த உலகத்திலே நீ யாராயிருந்தாலும்
இயேசுவை ஏற்றுக் கொண்டால் தானே இரட்சிப்பு - (2)
இரட்சிப்பு இல்லன்னு சொன்னா ஆக்கினை தீர்ப்பு -(2)
இது சத்தியம் இது சத்தியம் இது சத்தியம் வேத சத்தியம் --(2)
வானத்துக்கு கீழும் பூமிக்கு மேலும்
இயேசுவால் அன்றி இரட்சிப்பு இல்லை -(2)
இயேசுவைத் தொழுது கொள்ளும்
யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்-(2)
இயேசுவை விசுவாசித்து ஞானஸ்நானம்
பெறுபவன் தானே இரட்சிக்க படுவான்--(2)
இயேசுவை விசுவாசியாத அனைவரும்
ஆக்கினை அடைவார்கள்
சீக்கிரம் வருவேன் என்றவர் வேகமாய் வருவார்
தூதர்களோடு நியாயம் தீர்க்க வருவார்--(2)
இன்றே மனம் திரும்பிடு மனிதா
இயேசுவை ஏற்றுக் கொண்டிடு --(2)