துதிப் பாடல்கள்

நீ உயிரோடு இருக்கும்

Nee Uyirodu Irukkum

நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும்

எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2

நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை - 2

நீ போகும் இடமெல்லாம் உன்னை ஆசீர்வதிப்பேன்

நீ நிற்க்கும் இடமெல்லாம் உனக்கு சொந்தமாக்குவேன் - 2

நீ உன் தேசத்திற்கு திரும்பும் மட்டும்

நான் உன்னோடே கூட இருந்திடுவேன் - 2

நீ செய்யும் வேலையெல்லாம் நான் வாய்க்க செய்யுவேன்

கடன் வாங்காமலே உன்னை உயர்த்திடுவேனே - 2

நீ திடமனதாய் இரு தைரியமாய் இரு

நான் உன்னை காக்கிறவர் உறங்குவதில்லை - 2

உன் கண்ணீரை கண்டவர் ஆசீர்வதித்திட

தலை குனிந்த இடத்திலே நிமிர செய்யுவேன் - 2

நீ கலங்காதே திகையாதே

நான் உன்னோடு இருப்பதை மறந்துவிடாதே - 2

நான் உயிரோடு இருக்கும் நாளெல்லாம் ஒருவனும்

எதிர்க்கொண்டு நிற்ப்பதே இல்லை - 2

நீர் என்னை விட்டு விலகுவதில்லை

நீர் என்னை என்றும் கைவிடுவதில்லை - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு