துதிப் பாடல்கள்

நீதியின் சால்வை

Needhiyin Saalvai

நீதியின் சால்வை அணிந்து நல் ஆவியில்

நிறைந்து பெருந்தொனி எழுப்பிடுங்கள்

ஆவியோடும் கருத்தோடும் துதியுங்கள்

கர்த்தரை உயர்த்திடுங்கள்

மீட்படைந்தோர் களிப்போடே

சீயோன் விரைந்திடுவார்

நித்திய மகிழ்ச்சி நிலைத்தோர்

சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும்

தாழ்ந்த கரங்கள் எழும்ப

ஓய்ந்த தொனிகள் முழங்க

ஓய்வின்றி துதிகள் தேவனுக்களிப்போம்

சீயோன் மலையின் மீதினிலே

அல்லேலூயா துதிப் பாடி

ஆண்டவரைப் புகழ்வோம்

அவரின் முன்பாக பணிந்து குணிந்து

துதித்து உயர்த்திடுவோம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு