துதிப் பாடல்கள்

நீங்க இருக்கையிலே

Neenga Irukkaiyilae

நீங்க இருக்கையிலே - இந்த

ஏழைக்கு ஏது பயம் - இயேசப்பா

உலகின் ரட்சகனே கல்வாரி நாயகனே

சர்வலோக ராஜாவே - எம்மை

என்றும் ஆளும் தேவனே

பேசுபவர் எல்லாம் பேசட்டுமே

வசைமாரி பொழிவோர் பொழியட்டுமே - (2)

கர்த்தாவே நீரேன் சகாயர்

யார் எனக்கு என்றும் எதிராளி - (2)

ஆயிரம் பதினாயிரம் வரட்டும்

ஏகமாய் கூடி எதிர்க்கட்டுமே - (2)

அவர்களோடிருப்போரைபார்க்கிலும்

நம்மோடிருப்பவர்கள் அதிகம் - (2)

தேவன் என்னை கைவிட்டார்

ரட்சிக்க யாரும் இல்லை என்றார் - (2)

ஆனாலும் நீர் எந்தன் கேடகமும்

எந்தன் தலையை உயர்த்துவீர்- (2)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு