நீர் போதுமே என் வாழ்விலே இயேசுவே -2
உம் கிருபை அது போதுமே
என் மகிமையும் பாடுமே
நாள்தோறும் உந்தன் நாமம் உயர்த்துவேன்-2
என் மீட்பரே என் அருமை இரட்கா
என் பிரியமே என் வாழ்க்கையின் நாயகா
உந்தன் நாமம் உயர்த்தி பாடுவேன்
வாழ்கிறேன் கிருபையால் பாடுவேன்
உந்தன் மகிமையை உயர்த்தி
1-தாயினும் மேலாய் என்மேல் பாசம் வைத்தீரே
தாங்கிடும் தயவே எந்தன் ஆறுதல் நீர்தானே-2
உம்மை மறந்தால் நான் எங்கே ஓடுவேன்
உம்மைப் பிரிந்தால் நான் எப்படி உயிர் வாழ்வேன்
என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
2- உமக்குப் பிரிய மகனாக என்னை மாற்றுமே
உம்முடைய வழியிலே நடத்தி ஆவியை ஊற்றுமே-2
சத்திய ஆவியே என் மேல் வாருமே
நித்திய காலமாய் உம் கிருபையைத் தாறுமே
என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
3-என் வாழ்வின் வழிகளிளெல்லாம் என்னோடு வருகிறீர்
நான் போகும் பாதைகளெல்லாம் நெய்யாய்ப் பொழிகிறீர்-2
எந்தன் வாழ்க்கையின் புது வசந்தம் நீர் தானே
உமது வெளிச்சத்தில் நான் வெளிச்சம் காண்பேனே
என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே -என் இயேசுவே
4- உம்முடைய திருமுகம் காண உள்ளம் ஏங்கிடுதே
ஏக்கங்கள் நிறைவேற்றிட என் நேசரே வாருமே-2
உந்தன் நினைவால் நான் கரைந்தே போகிறேன்
எந்தன் வாழ்க்கையின் முழு தேடல் நீர்தானே
என் தேவனும் என் ஜீவனும் நீர்தானே-என் இயேசுவே