நீர் செய்த நன்மைக்காக
நன்றி ராஜா - ( 2 )
1. மாராவின் கசப்பை எல்லாம்
மதுரமாக்கினீர்
என் வாழ்க்கை எல்லாம்
செழிப்பாக மாற்றி விட்டீரே - நன்றி
2. மனிதன் கதவை அடைத்தாலும்
திறந்து விட்டீரே
மனித அன்பு மாறினாலும்
நீர் மாறவில்லையே - நன்றி
3. தினம் தினம் போஷித்து
நடத்துகின்றீரே
சேவைக்காக ஏங்கும் போது
உதவி செய்தீரே - நன்றி
4. எல்லா பக்கத்தில் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி போகவில்லை
எல்லோராலும் கைவிடப்பட்டும்
சோர்ந்து போகவில்லை - நன்றி
5. ஆவியின் அபிஷேகத்தை
எனக்கு தந்தீரே
என் பாத்திரம் எல்லாம்
நிரம்பி நிரம்பி வழிய செய்தீரே - நன்றி
6. ஜெய கிறிஸ்து ஜெயத்தை
எனக்கு தந்தீரே
ஜெய அல்லேலூயா
பாட செய்தீரே - நன்றி
7. புதிய ஜீவன் எனக்கு தந்து வாழ வைத்தீரே
உமக்காக அனுதினமும் ஓட வைத்தீரே-2-நன்றி