துதிப் பாடல்கள்

நீர் தானையா நல்ல மேய்ப்பர்

Neer Thaanaiyaa Nalla Meyppar

நீர் தானையா நல்ல மேய்ப்பன்

உம்மைத்தான் பின் தொடர்வேன்

எனக்கு நீர் தானையா நல்ல மேய்ப்பன்

உம்மைத்தான் பின் தொடர்வேன்

இரட்சண்ய நாளினிலே என்னை

இரட்சித்த தெய்வம் நீரே... - 2

தேனிலும் இனிய வார்த்தைகளாலே

தேற்றி என்றும் அணைப்பவரே - எனக்கு

வாசலின் வழியாய் வந்தவரே - என்னை

பெயர் சொல்லி அழைத்தவரே... - 2

மந்தைகட்காக உம் ஜீவனைத்தந்து

ஜீவனைப் பெற்றவர் நீரே - எனக்கு

போற்றுவார் போற்றட்டும்

தூற்றுவார் தூற்றட்டும்

புகழ்பாடா தயங்கிடேனே... - 2

நித்தமும் உம்மை துதித்திடுவேன்

நின்மதி என்றும் நின்மதியே... - 2 எனக்கு

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு