நீர் வாழும் தேசம் துதி தேசம்
அங்கே தான் நாங்களும் வரவேண்டும்... - 2
நீர் வரும் போது இயேசுவே
எங்களை உம்முடன் அழைத்து செல்வீர்... - 2
இரவும் பகலும் தூதர் கூட்டம்
பரிசுத்தர் பரிசுத்தர் என்று துதிக்க... - 2
நாங்களும் உம்மை வாழ்த்த வேண்டும்
தினமும் உம்மை போற்ற வேண்டும்.
அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
அ-ல்-லே-லூ-யா... - 2 அ-ல்-லே-லூ-யா... - 2
எங்கே பார்த்தாலும் பொற்தளவீதி
இருளே அங்கில்லை வெளிச்சமே உண்டு... - 2
ஆடலும் பாடலும் நிறைந்த இடம்
அருள் நாதர் இயேசு வாழும் இடம்... - 2
இவ்வுலகப் பாடுகள் எங்களிடத்தில்
நெருங்கி என்ன செய்ய முடியும்... - 2
லேசாய் வந்திடும் உபத்திரவம்
நித்திய கன மகிமை உண்டாகுமே... - 2