துதிப் பாடல்கள்

நீரே எல்லாம் நீரே

Neerae Ellaam Neerae

நீரே எல்லாம் நீரே

நீரே இயேசுவே நீரே-2

கண்களை இழந்தோர்க்கு கண்கள் நீரே

செவிகளை இழந்தோர்க்கு குரலும் நீரே-2

குரல்தனை இழந்தோர்க்கு வார்த்தையும் நீரே

வாழ்வை இழந்தோருக்கு மறுவாழ்வு நீரே

தாய் தந்தை இழந்தோர்க்கு தாயும் தந்தையும் நீரே

கணவனை இழந்தோர்க்குக் காவல் தெய்வம் நீரே-2

கடனில் வாழ்பவரை விடுவிப்பவர் நீரே

கட்டுண்டவர்கட்கு விடுதலையும் நீரே

பிரிந்த குடும்பங்களை இனணப்பவர் நீரே

பிள்ளை இல்லாதோர்க்கு வரம் தருபவர்நீரே-2

நிம்மதி இழந்தோர்க்கு நிம்மதி நீரே

நினைவுகள் இழந்தோர்க்கு நினைவுகள் நீரே

இரட்சிப்பில்லாதோரை இரட்சிப்பவர் நீரே

திரும்பி போனவர்களை திருப்புவர் நீரே-2

பாவ மனிதர்களை மீட்பவரும் நீரே

மீண்டும் உலகிற்கு வருபவரும் நீரே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு