நீரே நீரே நீரே எந்தன் தேவன்
அதிகாலையில் உம்மை தேடுவேன்
கூப்பிடும் காக்கை குஞ்சுகட்கும்
ஆகாரம் தினம் தருபவரே
கூப்பிடும் என் குரல் கேட்பவரே
தேவையெல்லாம் தினம் தருபவரே
தாவீதின் மைந்தனே என்று கூப்பிடும் குரல் கேட்டீரே
நின்றீரே வந்தீரே தொட்டு சுகம் தந்து விடுவித்தீரே
இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர்
உந்தன் மகிமையால் சுகத்தை தருகிறீர்
இயேசுவே தேவனே என்று அழுதிடும் முகம் பார்த்தீரே
நின்றீரே வந்தீரே தொட்டு உயிர் தந்து மகிழ்வித்தீரே
இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர்
உந்தன் கிருபையால் புது உயிர் தருகிறீர்
தகப்பனே தந்தையே என்ற பிள்ளையின் சத்தம் கேட்டீரே
வந்தீரே தந்தீரே ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீரே
இன்றும் வாழ்கிறீர் இயேசுவே இன்றும் வாழ்கிறீர்
உந்தன் ஆவியால் தாகம் தீர்க்கிறீர்