நீரில்லையென்றால் நானொன்றும் இல்லை
நீர் என்னில் வந்தால் குறை ஒன்றும் இல்லை
குறை ஒன்றும் இல்லை - 2
உமையன்றி எனக்காரையா
நான் உமை நம்பி வந்தேனையா
உயிர் வாழும் நாட்கள் எல்லாம்
நான் உமக்காக வாழ்வேனையா
தண்ணீரை ரசமாக்கினீர் - எந்தன்
கண்ணீரை களிப்பாக்கினீர்
உம் சமூகம் வரும் போதெல்லாம்
என் உள்ளத்தை மகிழ்வாக்கினீர்
அன்னாளின் தேவன் நீரே
அந்த ஆகாரின் தெய்வம் நீரே
மனங்கசந்து அழும் போதெல்லாம்
என்னை தேற்றுகின்ற தெய்வம் நீரே