துதிப் பாடல்கள்

நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்

Nenjil Or Melliya Satham

நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்

ஒரு உண்மை சொன்னதே

உண்மையை சில வரிகள் கொண்டு

நான் ஒரு பாடலாக்கினேன்

மேடைகள் ரசிக்கும் கூட்டங்கள்

தேடி பாடல் எழுதினேன்

ஓ...சிறகுகள் முளைக்க உயரங்கள்

பறக்க முந்திக் கொண்டேன்

உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல

விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய

உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல

விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய

கண்ணில் ஈரம் என்னை உயர்த்தும்

வரையில் நான் காத்திருப்பேன்

நெஞ்சில் ஓர் ஏக்கம் நீர் கொடுத்த

அழைப்பினைக் காத்துக் கொள்வேன்

என்னை தூஷனம் பேசும் அந்த நேரம்

சபித்துக் கொல்லும் அந்த நேரம்

தரிசனம் தடுக்கும் அந்த நேரம் மன்னிக்கின்றேன்

என்னை உத்தமன் என்று சொல்லும் நேரம்

கிரீடம் சூடும் அந்த நேரம்

கட்டி அணைக்கும் அந்த நேரம் NENJIL கொள்கிறேன்

உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல

விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய

உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல

விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய..

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு