நேசிக்க கூட அருகதையற்ற என்மேல்
நேசம் வைத்திட்ட இறைவா
வேண்டாமென்று வெறுத்திட்ட என்னை வேண்டுமென்று
அணைத்திட்ட தகப்பா...
அன்பே அரவணைப்பே எந்தன் துணை அவரே
1, கழுதையென்று ஒதுக்கிட்ட என்னை கனிவாய்
அழைத்து சுமக்கவும் வைத்தீர் - 2
2, நம்பினோரெல்லாம் உதறிட்ட போதும்
நம்பிக்கை தந்து வாழுவும் வைத்தீர் - 2
3, முகத்தைப் பார்த்து மதிப்பிட்டோர் மத்தியில் மனதை பார்த்து உயர்த்தின தேவா - 2