துதிப் பாடல்கள்

நிச்சயமாகவே உங்களை

Nicchayamaagavae Ungalai

நிச்சயமாகவே உங்களை ஆசீர்வதிப்பார்

உங்களை பெருகவே பெருகச் செய்வார் - 2

நிச்சயமாகவே நிச்சயமாகவே

ஆபிரகாம் சாராள் அவர் ஆசீர்வதித்தவர்

இன்று முதல் உங்களையும் அவர் ஆசீர்வதிப்பார் - 2

கர்த்தருக்குள் சந்தோஷமாய்

எப்பொழுதும் இருந்தால்

நித்தம் வாழ்வில் சமாதானமே... - 2

நிச்சயமாகவே.. நிச்சயமாகவே

ஈசாக்கு ரெபெக்காளை ஆசீர்வதித்தவர்

இன்று முதல் உங்களையும் - 2

அவர் ஆசீர்வதிப்பார் - 2

கர்த்தருக்குப் பயந்து

அவர் வழிகளில் நடந்தால்

என்றும் நீங்கள் பாக்கியவான்கள் -2

கானாவூர் கல்யாணத்தில்

வந்த தேவனே (இயேசுவே)

இந்த நாள் கல்யாணத்தை ஆசீர்வதியும் - 2

அன்று செய்த அற்புதங்கள் அதிசயமெல்லாம்

இன்று செய்ய வல்லவர் நீரே- 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு