துதிப் பாடல்கள்

நிலையான சிங்காசனம்

Nilaiyaana Singaasanam

நிலையான சிங்காசனம்

என் இயேசு எனக்குத் தந்தார்

அவர் இருக்கின்ற உயரத்திலே

என்னை அவருடன் அமரச் செய்தார்

நான் பரிசுத்தவானாய் வாழ்வதற்காய்

இயேசு பாவமானார்

நான் பெலவான் என்று அழைக்கப்பட

இயேசு எனக்காக கைவிடப்பட்டார்

நான் செல்வந்தனாக வாழ்வதற்காய்

இயேசு ஏழையானார்

நான் ஆசீர்வாதமாய் வாழ்வதற்காய்

இயேசு எனக்காக சாபமானார்

நான் ஆரோக்கியமாக வாழ்வதற்காய்

இயேசு நொறுக்கப்பட்டார்

நான் பரலோக பாக்கியம் பெறுவதற்காய்

இயேசு எனக்காக உயிரைத் தந்தார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு