துதிப் பாடல்கள்

நிறைவேற்றியருளும் தேவா

Niraivetriyarulum Devaa

நிறைவேற்றியருளும் தேவா

உம் வாக்குத்தத்தங்களை

வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்ல

வாக்கு மாறாத எங்கள் தேவனே

வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும்

வல்லமையின் தேவனே - எங்கள்

ஆம் என்றும் ஆமென் என்றும்

உமக்குள் இருக்கிறதான

உறுதியும் உண்மையுமான

உம் வாக்குத்தத்தங்களை - தேவா

முன்மாரியும் பின்மாரியுமான

பரிசுத்த ஆவியின் மழையதனை

மின்னல் இடி முழக்கத்துடனே

முழுதுமாய்ப் பெய்தருள்வீர் - தேவா

கடைசி நாட்களில் மாம்சமான

யாவர் மேலும் என் ஆவியை

ஊற்றுவேன் என்று யோவேலினால்

உறுதியாய் உரைத்தீரே - தேவா

உங்கள் குமாரரும் குமாரத்திகளும்

தீர்க்கதரிசனம் உரைப்பர் என்றும்

தரிசனங்கள் சொப்பனங்களையும்

காண்பர் என்றும் உரைத்தீர் தேவா

என்னுடைய ஊழியக்காரர்

ஊழியக்காரிகள் மேலும்

என் ஆவியை ஊற்றுவேன் என்று

உரைத்தீர் உறுதியாய் - தேவா

உயர வானத்திலும் தாழ பூமியிலும்

அற்புத அடையாளங்களையும்

பெரிய அதிசய செயல்களையும்

செய்வேன் என்றீரே - தேவா

ஆதி சபையில் ஆத்துமாக்கள்

திரள் திரளாய் இரட்சிக்கப்பட்டு

ஆவியின் அபிஷேகம் பெற்றது போல்

அதிகமாய்க் கிரியை செய்வீர் - மிக

ஆத்மீக மழையா பரிசுத்த ஆவியின்

மழையால் தாகம் தீர்க்கப்படும்

தேவ அன்பினால் நிறைக்கப்பட

தேவரீர் கிருபை செய்வீர் - எம்

குருடன் பார்க்கவும் ஊமையன் பேசவும்

செவிடர் கேட்கவும் கிரியை செய்வீர்

சப்பாணிகள் குதித்து நடக்கவும்

சர்வாங்க சுகமளிப்பீர் - தேவா

மரித்தோர் உயிர்த் தெழுந்திடவும்

குஷ்டரோகம் குணமாகிடவும்

பாவ ரோகக் கேடுகள் நீங்கி

பரிசுத்தமடைந்திடவும் - யாவரும்

அகிலமெங்கும் ஆத்துமாக்கள்

அலை அலையாய் திரண்டிடும்

அன்பரின் ராஜ்யத்திற்குள்ளாகி

அன்பரின் மகிழ்ந்திடுவோம் - என்றும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு