ஓ புது ஆவியே ஓ புது பெலனே
ஓ வந்திடுமே ஓ அக்கினியே
ஓ வல்லமையே ஓ நிரப்புதே
யெகோவா யீரே எல்லாம் நீரே – 2
தேவ தரிசனம் மகிமையில் நிரப்பிடும்
இதயங்கள் இயங்கிடுமே
இயேசுவைப் போல நம்மையும் மாற்றிடும்
பூமியில் பரலோகம் மயங்கிடுமே
கர்த்தரின் ஆவி ஜனங்களை நிரப்பியே
அதிசயம் நடந்திடுமே
எங்களுக்கும் வல்லமை
இப்போதே இறங்கிடுமே
தேவன் அதிசயம் தீர்க்க தரிசனம்
பரிசுத்த ஆவியாய் இறங்கிடுமே
உயிர்த்து எழுந்தவர் ஜீவனும் ஆனவர்
உணர்வில் நம்மோடு இணைந்தாரே
ஆதாமின் நாசியில் ஆவியை
ஊதியே ஆத்துமாவை படைத்தாரே
பூமியின் மேலே ஆவியாய் அசைந்தவர்
நம்மையும் அசைப்பாரே