துதிப் பாடல்கள்

ஒடி வாங்க தேடி வாங்க

Odi Vaanga Thedi Vaanga

ஒடி வாங்க தேடிவாங்க இயேசு ராஜாவிடம்

பாடிவாங்க கூடிவாங்க பரமன் இயேசுவிடம்

பரமன் இயேசுவிடம்

1. உன்னைத் தேடிவந்த இயேசுவைப் பாரு

வேதனை மாற்றுவார் குறைதனைக் கூறு

நன்மைகள் பல செய்வார் - அவர்

ஆறுதல் தந்து சுகம் தருவார் - ஒடிவாங்க

2. வறுமையில் நீயும் வாடி இருக்கலாம்

வியாதியின் துன்பத்தில் மனம் சோர்ந்து போகலாம்

அற்புதம் பல செய்வார் -அவர்

ஆறதல் தந்து சுகம் தருவார் - ஒடிவாங்க

3 கர்த்தரை துதித்தால் கண்ணீர் மாறும்

கஷ்டங்கள் போகும், பாரங்கள் தீரும்

தேவைகள் அவர் கொடுப்பார் அவர்

தேன் போல ஆசீர்வதிப்பார் - ஒடிவாங்க

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு