ஊசிமணி பாசிமணிவிப்போம் சாமி - நாங்க
ஊரூரா தங்கி காலம் கழிப்போம் சாமி
பச்ச மணி பாலமணி விப்போம் சாமி - நாங்க
கண்ணிவச்சி குருவிகள் புடிப்போம் சாமி
காட புடிப்போம் கெளதாரி புடிப்போம்
கொக்கு புடிப்போம் காட்டு பூனை புடிப்போம்
ஆனா . . எங்களையே இயேசு சாமி
புடிச்சிட்டாரு சாமி - தன்னோட
பிள்ளைகளா மாத்திட்டாரு சாமி - சாமியோவ்
டியாலங்கடி . டியாலோ
ஹாயாலங்கடி , ஹாயாலோ
டியாலோ . . டிங்கிரி டிங்கிரி . , டியாலோ
ஹாயாலோ . . ஹாயாலங்கடி . ஹாயாலோ
நரிக்கு குழிகள் உண்டு குருவிக்கு கூடு உண்டு !
இயேசுவுக்கு தலைசாய்க்க இடமில்லையே உலகத்திலே
என் மனசுக்குள்ளே இடங்கொடுத்தேன் சாமி
இயேசு சந்தோஷமா வந்திட்டாரு சாமி - டியாலங்கடி
துப்பாக்கி கையிலெடுத்து தோட்டாவ பையிலெடுத்து
காக்காவ தேடிகிட்டு மர மரமா திரிஞ்சோம் சாமி
ஆனா எங்கள தேடி வந்தார் இயேசு சாமி
தன் உயிரைக் கொடுத்து எங்கள மீட்டார் சாமி - டியாலங்கடி