துதிப் பாடல்கள்

ஓரு கதையை போல என் நாட்கள்

Oru Kadhaiyai Pola En Naatkal

ஓரு கதையை போல என் நாட்கள் முடிந்தது

நான் நடந்த பாதைகள் எல்லாம் மறைந்து போனது - 2

மாயை மாயை எல்லாம் மாயை காணும் உலகில் எல்லாம் மாயை - 2

காண்பதெல்லாம் மாயை இந்த உலகிலே நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே - 2

- ஓரு கதையை

எனது நாட்கள் எழுபது வருடம்

பெலத்தின் மிகுதியால் எண்பது வருடம்

வருத்தமும் சஞ்சலமும் வாழ்க்கையின் அங்கம்

நிலையானதொன்றும் இல்லை பூமியிலெங்கும் - 2

சீக்கிரமாய் என் நாட்கள் கடந்து போகுதே

என் ஆவிக்கூட என்னை விட்டு பிரிந்து போகுதே - 2

- காண்பதெல்லாம் மாயை

வேஷமாகவே மனுஷன் திரிக்கிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்

ஆஸ்தியை மிகுதியாய் சேர்த்து வைக்கிறான்

எதுவுமே சொந்தமில்லை ஏற்க மறுக்கிறான் - 2

நொடி பொழுதில் உன் வாழ்க்கை முடிந்து போகுது

இமை பொழுதில் நம் கனவும் களைந்து போகுது - 2

- காண்பதெல்லாம் மாயை

பூமி வாழ்க்கை நிரந்தரம் இல்லை

ஒன்றும் நமக்கு சொந்தமில்லை

ஓரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணி

போகாதே என் இயேசுவையும் தள்ளி-2

இயேசுவிடம் உள்ளது உண்மை சத்தியம்

இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் நிச்சயம் - 2

- காண்பதெல்லாம் மாயை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு