துதிப் பாடல்கள்

ஒரு நாளும் அழியாத

Oru Naalum Azhiyaadha

ஒரு நாளும் அழியாத உறவென்னிலே

உருவாக்கும் அருளேசு வரவென்னிலே

பிளவில்லை அன்பில் துயரில்லை நெஞ்சில்

எனை ஆளும் அவரன்பு இனி நாளுமே

நட்பென்னும் வானங்கள் இருள் மூடும் போதிலே

உறவென்னும் கீதங்கள் உருமாறும் போதிலே

உன் அருளன்பு எனைத் தாங்குமே

அன்பென்னும் கீதங்கள் அணைகின்ற நேரங்கள்

ஒளியாக எழுந்து உயிரோடு கலந்து

ஒரு நாளும் அழியாத உறவொன்று தா

இனி என்னில் வாழ்வதோ நானல்ல நீ இயேசுவே

இரவென்ன பகலென்னவோ

இதயத்துள் நீ பேசவே

இனி எந்நாளும் பயம் இல்லையே

முடிவில்லா வாழ்வுக்கு முதலாகும் இயேசுவே

ஊரெங்கும் செல்வேன் உன் நாமம் சொல்வேன்

உன்னன்பில் நிலையாகும் வரமொன்று தா

நம்பிக்கை நீயல்லவோ நலமாக்க வா இறைவா

நெஞ்சுக்குள் நோயல்லவோ குணமாக்க வா இறைவா

இனி நானுந்தன் சேயல்லவோ

கனிவுடன் கேட்கின்றேன் கருணைக்கண் நோக்குமே

காலங்கள் தோறும் உன் பாதங்கள் வேண்டும்

சோகங்கள் அங்கே கண் மூடித்துயிலும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு