ஒரு வார்த்தை சொல்லும் இயேசுவே
என் ஆன்மா குணமடையும்
ஒரு வார்த்தை
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
உம்மிடம் தானே உள்ளன
ஒரு வார்த்தை
இறைவா பேசும் இயேசுவே பேசும் - 2
வாழ்வு தரும் வார்த்தையினால்
குருடனும் பார்வை பெற்றான் - அந்த
வல்லமையின் வார்த்தையினால்
ஊமையும் பேசினான்
ஒரு மொழி சொன்னதினால்
அந்த அலைகடல் ஓய்ந்ததே - அந்த
திருமொழி சொல்வதனால்
இன்று என்மனம்மகிழ்கின்றது
கலைமான்கள் தண்ணீருக்காய்
ஏங்கி தவிப்பது போல் என்
இயேசுவே உம் மொழிகளுக்காய்
என்னுள்ளம் தவிக்கின்றது
அருள் மொழி நாயகனே
ஆறுதல் தந்திடுவீர் - உம்
அன்பினிலே வாழ்ந்திடவே
வழிதனை காட்டிடுவீர்