ஒரு வார்த்தைக்காக காத்திருக்கின்றேன்
என்னோடு இன்று நீர் பேச வேண்டும்
உம்மாலே ஆகும் எல்லாமே கூடும்
ஒரு வார்த்தை போதும் கர்த்தாவே
1.ஒரு வழி அடைந்தாலும் புது வழி திறந்திடுவீர் – 2
பாதை மறந்தாலும் வழியை காட்டிடுவீர்
பாதைகள் மாறினாலும் வழியை காட்டிடவே
2.வியாதியில் விழுந்தாலும் சுகத்தை கொடுத்திடுவீர் – 2
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடுவீர்
மரணமே ஆனாலும் ஜீவன் தந்திடவே
3.தோல்வியில் துவண்டாலும் தூக்கி நிறுத்திடுவீர் – 2
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்திடுவீர்
தாழ்த்தப்பட்டாலும் உயர்த்தி வைத்த்திடவே