ஒருபோதும் வற்றாத பேரன்புக் கடலில்
என் வாழ்வின் படகுசெல்கின்றது... - 2
அருள்நாதர் இயேசு என் படகில் இருக்க
எனக்கென்ன மனக்கவலை... - 2
துயர் என்றும் புயல் காற்று அலையாக வந்தால்
என் நேசர் எழுந்து அதட்டிடுவார்... - 2
ஆறுதல் அடைவேன்... அமைதியும் பெறுவேன்... - 2
பயமின்றி தினமும் நான் பயணம் செய்வேன்... - 2
இருள் என்னும் இன்னல்கள் எமைச் சூழும் நேரம்
ஜெபம் என்னும் ஒளியேற்றி வழிகாணுவேன்... - 2
பரிசுத்த ஆவியே... கலங்கரை விளக்கம்... - 2
சரியான தேசத்திற்கு கொண்டு போவார்... - 2
நிலையான பொன் நகரம் நான் காண வேண்டி
அயராத ஜெபம் என்ற தண்டு வலிப்பேன்... - 2
ஆறுதலின் தேவன்... ஆண்டவர் இயேசு... - 2
அவரோடு எந்நாளும் நான் வாழுவேன்... - 2