ஒருமனம் எங்கு உண்டோ
அங்கு தானே விடுதலை
இருமனம் உனக்கிருந்தால்
வழிகளெல்லாம் நிலையில்லை - 2
விடுதலை வேண்டுமா
ஒருமனமாய் கூடுவோம்
விடுதலை வேண்டுமா
ஒருமனமாய் பாடுவோம்
1. சபையிலே தேவனை துதிப்பதற்கு
தேவை ஒருமனம்
துதிக்கின்ற போது மற்றவரை
பார்க்காமல் இருக்கனும்
(துதிக்கின்றபோது அங்கும்
இங்கும் பார்க்காமல் இருக்கனும்)
வந்தது போலே போகவேண்டுமா
விடுதலை உனக்கு வேண்டாமா - 2
2. ஒன்று சேர்ந்து ஜெபிப்பதற்கு
தேவை ஒருமனம்
ஒரு மனதோடு ஜெபித்தால்
தானே பதில் வரும்
முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
கர்த்தரில் அன்பு கூர்ந்து பாடு - 2
3. ஊழியம் செய்யும் யாவருக்கும்
தேவை ஒருமனம்
ஒரு மனதோடு ஊழியம்
செய்தால் பலன்வரும் - 2
கவலைய மறக்கனு கசப்பபெறுக்கனும்
கர்த்தரை நினைக்கனும்
அன்பாய் இருக்கும் - 2
4. கணவன் மனைவி குடும்பத்திலே
தேவை ஒருமனம்
ஒருமனதோ வாழ்ந்தால்
வாழ்க்கை நிரந்தரம் - 2
புத்தியுள்ள மகளாய் (மகனாய்)
குடும்பத்தை கட்டுங்க குழப்பங்கள்
எழுப்பினால் இடித்து போடுங்க