ஒருவராய் சாவாமை உள்ளவரே
சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே
மனுஷராலே கண்டிராத மகத்துவரே
உம்மை எவரும் காணமுடியா உன்னதரே... - 2
உமக்கே மகிமை, உமக்கே கனமும்,
உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2
பிள்ளைகள் மாம்சமும் இரத்தத்தோடு இருக்கையிலே
நீரும் மாம்சமும் இரத்தத்தோடு வந்தீரே... - 2
மரண பரியந்தம் பிசாசுக்கடிமைப் பட்டோரை
உம் மரணத்தாலே ஜெயம் கொடுக்க நீர் வந்தீரே... - 2
உமக்கே மகிமை, உமக்கே கனமும்
உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரமும்...-2
உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருப்பவரே - உம்மை
விசுவாசிப்போர் மரித்தாலும் பிழைப்பாரே... - 2
பிதாவும் நீரும் ஒன்றாகவே இருப்பதனால்
உம்மைக் கண்டோர் பிதாவையே காண்பாரே... - 2
உமக்கே மகிமை, உமக்கே கனமும்,
உமக்கே துதியும், உமக்கே ஸ்தோத்திரம்...-2
திக்கற் ரோராய் விடமாட்டேன் என்றுரைத்தவரே
தேற்றர வாளன் பரிசுத்தாவி ஆனவரே... - 2
திருடனைப்போல மீண்டும் வருவேன் என்றதனால்
தினமும் ஜெபித்து விழித்து காத்து இருக்கின்றோம்...-2