ஒருவரும் சேராத ஒளியில்
வாசம் செய்யும் மெய் தெய்வமே - வேறு -2
அந்த ஒளியில் என்னை அழைத்து
உந்தன் ராஜ்யத்தில் சேர்த்துக் கொள்வீரே-2
ஹால்லேலூயா ஹா..ஹா.. ஹால்லேலூயா-2
1- நிம்மதியற்ற வாழ்வும் வேண்டாம்
நிலையற்ற உலக மேன்மை வேண்டாம்-2
நீதியில் நிலைத்து உம்மை சேர
எந்த தியாக வேள்வியிலும் நான் வெல்வேன்-2
அந்த மகிமை என்ன சொல்ல ஆஹா எந்தன் உள்ளம் ஆனந்திக்குதே-2
2- பொன்னும் பொருளும் செல்வம் ஏதும் வேண்டாம்
பொன்னான இயேசு நீரே போதும்-2
மண்ணான மாய வாழ்வைத் தள்ளி-தேவ
மகிமையின் பிரசன்னத்தில் வாழேவேன் -2
3- இந்த பூமி எனக்கு சொந்தமில்லை -இங்கே
எனது மனமே தங்கி நிற்கவில்லை-2
எனது நெஞ்சின் ஆசை ஏக்கம் எல்லாம்
அந்தப் பரலோகம் பரலோகமே -2
4- நகரத்தின் வாசல் சுத்தப் பொன்னாம்
அஸ்திபாரமெல்லாம் இரத்தினக் கல்லாம்-2
துன்பம் துயர் அற்று ஜீவ நதியில்
இன்பக் களிப்பில் மூழ்கி நீந்தி மகிழுவேன்