ஒவ்வொருநொடிப்பொழுதும் என்னை
உறங்காமல் காப்பவரே
நீர் ஒரு நொடி உறங்கிருந்தால் என்றோ
நான் மறைந்திருப்பேன்
இரவும் பகலும் என்னை கண் விழித்து காத்தீரே
நான் போகுமிடமெல்லாம் என் கூடவே வந்தீரே
உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே
உமக்கே நன்றி அப்பா-2
கேடகமாய் இருந்தீர் எனக்கு அரணுமாய் இருந்தீர்-2
எந்தன் கோட்டையுமாய் இருந்தீர்
என்னைக் கூடவே வைத்துக் கொண்டீர் -2
கன்மலையின் வெடிப்பினிலே
என்னை வைத்து பாதுகாத்தீர்
என்னை வைத்து பாதுகாத்தீர்
உமக்கே நன்றி அப்பா என் இயேசுவே
உமக்கே நன்றி அப்பா-2
ஆறுதலாய் இருநதீர்எனக்கு ஆலோசனை தந்தீர்-2
எனக்கு நங்கூரமாய் இருந்தீர்
என்னை நண்பனாய் ஏற்றுக் கொண்டீர்-2
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பேன் என்றீர்
என்னோடு இருப்பேன் என்றீர்
உமக்கே நன்றி அப்பாஎன் இயேசுவே
உமக்கே நன்றி அப்பா-2