பாடல் ஒன்றுபாடு
தாளம் சேர்ந்து போடு
நீ ராஜரீகக் கூட்டமல்லவோ
வெற்றி ஒன்றை நாடு
இலக்கை நோக்கி ஓடு
நீ ஆள வந்த ராஜாவல்லவோ
தேவ ராஜ்யம் தேடு
தேவ நீதி நாடு
நீ செய்வதெல்லாம் வாய்க்குமல்லவோ
பாவமற்றவர் உனக்காய் பாவத்தையும் சுமந்தார்
வியாதியற்றவர் உனக்காய் நோய்களையும் சுமந்தார்
செல்வம் நீ பெறவே தரித்திரரே ஆனார்
வசனம்நிறைந்த இதயம் இருந்தால்
வெற்றி அறிக்கை வாயில் இருந்தால்
மலைகளும் நிலைபெயரும்
வார்த்தையில் என்றும் பிரியம் இருந்தால்
இரவும் பகலும் தியானம் செய்தால்
வெற்றி மேல் வெற்றி வரும்
தட்டுங்கள் கரங்கள் தட்டுங்கள்
கொட்டுங்கள் முரசு கொட்டுங்கள் !
வழங்குங்கள் அன்பை வழங்குங்கள்
முழங்குங்கள் ஜெயம் முழுங்குங்கள்
ஆடுகள் துள்ளி ஆடுங்கள்
கர்த்தரின் கரம் பற்றுங்கள் 2 -