துதிப் பாடல்கள்

பாதாளம் போன என்னை

Paadhaalam Pona Ennai

பாதாளம் போன என்னை

பரத்திற்கு அழைத்தீரய்யா

பரனோடு பந்தியில் அமர எனக்காய் பலியானீர்

பரிகாரியாய் மானிட பரிகாரியாய் (2)

1. பாவி என்னைத் தேடிவந்தீர்

பரிவாக என்னைத் தொட்டீர்

பரலோக கீதம் பாட என்னை

பாசமாய் அழைத்தீர் (2) (2) – பாதாளம்

2. பழிகளை நான் சுமந்து நின்றேன்

பாரத்தை ஏற்றுக்கொண்டீர்

பற்பல பாஷை தந்து என்னை

பாந்தமாய் நடத்தி (2) (2) – பாதாளம்

3. உளையான சேற்றில் வாழ்ந்தேன்

உரிமையாய் அழைத்தீரய்யா (2)

உன்னதங்களில் வாழ என்னை

உண்மையாய் மீட்டு (2) (2) – பாதாளம்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு