துதிப் பாடல்கள்

பாதுகாத்தீரைய்யா

Paadhugaatheeraiyyaa

பாதுகாத்தீரைய்யா.....

பாதுகாத்தீரைய்யா.....

ஒரு சேதமும் அணுகாமல் காத்தீரைய்யா

உம் தூதரை அனுப்பியே பார்த்தீரைய்யா (2)

பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா

உந்தன் தோளில் சுமந்தீரைய்யா

பறந்து காக்கும் பட்சியைப் போலென்னை பாதுகாத்தீரைய்யா

என்னைத் தோளில் சுமந்து சென்றீரைய்யா

1. ஜீவனின் சவாசத்தை எனக்குத் தந்து

என் சுவாச உறுப்புகள் இயங்க வைத்தீர் (2)

ஜீவனைத் தந்தீர் எழும்பச் செய்தீர் (2)

உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும்

2. உலர்ந்து போன என் வாழ்க்கையை

உயிர்ப்பித்தீர் உந்தன் வல்லமையால் (2)

துதிக்கச் செய்தீர் மகிழ்வைத் தந்தீர் (2)

உற்சாகத்தின் ஆவியால் நிரப்பினீர் (2) - ஒரு சேதமும்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு