பாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவை
கூடிடுவோம் அவர் சமூகமதில்
கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலே மகிமையிலே - 2
என்னை நோக்கி கூப்பிடுங்கள்
நான் தருவேன் இளைப்பாறுதல் - 2
உன் மேல் கண்ணை வைத்து ஆலோசனை சொல்வேன்
என் கிருபையில் நீ பெலப்படு
வானமும் பூமியும் ஒளிந்திடும்
அவர் வார்த்தை ஒன்றும் ஒழிவதில்லை - 2
அவைகளை நீ நம்பி நாள்தோறும் துதித்து வந்தால்
கிடைத்திடுமே உனக்கு நித்திய மகிழ்ச்சி - 2
பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
பயந்து போகாதே - 2
பரமன் இயேசு துணை இருப்பாரே
எதற்கும் நீ கலங்காதே - 2